தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே |

நடிகர் பிரித்விராஜ் 'லூசிபர்' திரைப்படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிவிட்டார். மோகன்லாலை வைத்து தனது முதல் படத்தை இயக்கிய அவர் மீண்டும் அவரை வைத்து 'ப்ரோ டாடி' என்கிற படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, அஜித்தின் விடாமுயற்சி டிரைலரையும் வெகுவாக பாராட்டி பேசினார். ''நீங்கள் இந்த டிரைலரை பார்த்து விட்டீர்களா என்று தெரியாது.. ஆனால் நான் பார்த்து விட்டேன். தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த டிரைலர்களில் இதுவும் ஒன்று. அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். நிச்சயமாக அடித்து நொறுக்கும் வெற்றியை இந்த படம் பெறும்'' என்று புகழ்ந்துள்ளார்.
தனது பட விழாவில் அஜித்தின் விடாமுயற்சி படம் பற்றி பிரித்விராஜ் புகழ்ந்துள்ளதற்கு காரணம் இருக்கிறது. விடாமுயற்சி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் எம்புரான் பட தயாரிப்பில் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இணைந்து தயாரித்துள்ளது. அந்த நட்பின் அடிப்படையில் பிரித்விராஜ் விடாமுயற்சி டிரைலரை பாராட்டியுள்ளார்.
அது மட்டுமல்ல இந்த நிகழ்வில் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனியும் கலந்து கொண்டார். அவரையும் பிரித்விராஜ் பாராட்டினார். மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மம்முட்டியும் சமீபத்தில் அவர் நடித்த 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தை வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் கவுதம் மேனனும் கூட கலந்து கொண்டனர்.