அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தெலுங்குப் படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இப்படம் பெரும் வெற்றி பெற்று 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடினார்கள். சென்னையிலும் இப்படத்தின் சக்சஸ் பார்ட்டியை வைத்து கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த தகவலைத் தெரிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் விஜய் சேதுபதி, வாணி போஜன், சங்கீதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.