ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், தனுஷை கடுமையாக விமர்சித்திருந்தார்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது, நெட்பிளிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய, நெட்பிளிக்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.,28) தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிபதி ஏற்க மறுத்தார். மேலும், வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ம் தேதி பட்டியலிடவும் உத்தரவிட்டார்.