ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
மலையாளத்தில் விருதுக்குரிய படங்களாக தொடர்ந்து எடுத்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளவர் இயக்குனர் சணல்குமார் சசிதரன். இவர் எடுத்த 'ஓராள்பொக்கம், செக்ஸி துர்கா, வழக்கு, காயட்டம்' ஆகிய படங்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல விருதுகளை வென்றாலும் ரிலீஸாவதில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்தன. குறிப்பாக இவரது படங்கள் எதுவுமே நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவில்லை.
அதிலும் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்து தயாரித்த 'வழக்கு' என்கிற திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்தப் படம் தயாரித்து வெளிவருவதற்குள் டொவினோ தாமஸ் முன்னணி நடிகராக மாறி இருந்ததால் இந்த படத்தை வெளியிட்டால் தனது இமேஜ் பாதிக்கும் என தியேட்டர்களில் வெளியிட தயங்கினார். ஓடிடி நிறுவனங்களும் இந்த படத்தை வாங்குவதற்கு மறுத்தன. இதனால் ஒரு கட்டத்தில் கோபமான சணல்குமார் இந்த படத்தை பேஸ்புக்கில் தானே ரிலீஸ் செய்து அதிர்ச்சியை அளித்தார். அதுகுறித்த வழக்கு இன்னும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.
அதற்கு அடுத்ததாக மஞ்சு வாரியர் நடிப்பில் 'காயட்டம்' என்கிற படத்தை இயக்கினார் சணல்குமார். இந்த படத்தை மஞ்சு வாரியரே தயாரித்து இருந்தார். ஆனால் இந்த படம் முடிவடைந்த பின்னர் மஞ்சு வாரியருக்கும் சணல்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக மஞ்சு வாரியரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் ஏதோ ஆபத்தில் இருக்கிறார் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டார் சணல்குமார். இதனை தொடர்ந்து மஞ்சு வாரியார் அவர் மீது போலீசில் புகார் அளிக்க, கைது செய்யப்பட்ட சணல்குமார் அதன் பிறகு ஜாமினில் வெளிவந்தார்.
இப்போது வரை காயட்டம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான எந்த முயற்சியும் மஞ்சு வாரியர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த படத்தையும் விரைவில் ஆன்லைனில் இலவசமாகவே ரிலீஸ் செய்யப் போகிறேன் என்று தற்போது அறிவித்துள்ளார் சணல்குமார் சசிதரன். அது மட்டுமல்ல இங்கே மலையாளத்தில் தான் படங்களை இயக்குவதற்கு ஒரு சிலர் தொடர்ந்து மறைமுகமாக தடை செய்து வருவதாகவும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவில் இருக்க விரும்பாமல் தான் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார் சணல்குமார் சசிதரன்.