சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த படம் ' புறநானூறு'. ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து அந்த படத்தை துவங்கினார் சுதா கொங்கரா. டாவுன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது.
ஸ்ரீ லீலா, ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைப்பதில் சிக்கல் உள்ளதால் இப்படத்திற்கு மாற்று தலைப்பு என பல பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில் தற்போது 'பராசக்தி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தணிக்கை சான்றிதழுடன் செய்தி வலம் வருகிறது. இந்த தணிக்கை சான்றிதழில் ஒரு நிமிடத்திற்கான டீசராக தணிக்கை செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். படத்தின் தலைப்பு பற்றிய அறிமுக டீசராக இது இருக்கும் என தெரிகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்து வாழ்ந்து மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‛பராசக்தி' ஆகும். இந்தப்பட தலைப்பில் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க போகிறாராம்.