பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகர் மற்றும் இயக்குனர் மாதவன் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் . 90 காலகட்டத்தில் ஹிந்தி சீரியலில் நடித்து வந்தாலும் 2000ம் ஆண்டில் வெளிவந்த 'அலைபாயுதே' படத்தின் மூலம் தான் கதாநாயகனாக திரையுலகில் அடி எடுத்த வைத்தார். தற்போது மாதவன் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
சமீபத்தில் மாதவன் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் பயம் குறித்து பேசியதாவது, " நான் எனது சினிமா வாழ்க்கையில் இரண்டு விஷயங்களுக்கு பயந்திருக்கிறேன். ஒன்று முதல் நாள் படப்பிடிப்பில் ஈடுபட்டபோது, மற்றும் 2வது படத்தின் ரிலீஸ் தேதி அன்று. 25 ஆண்டுகள் சினிமாவில் பயணிப்பது எளிதானது இல்லை. மக்களின் ஊக்கம் தான் என்னைத் தொடர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.