வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்த பொங்லுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி பட வெளியீட்டில் நிகழ்ந்த குழப்பத்தால் இந்த பட ரிலீஸில் சிக்கல் எழுந்தது. தற்போது வீர தீர சூரன் திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளனர்.