திருப்பதியில் 'மொட்டை' போட்ட தயாரிப்பாளர் தில் ராஜு | கிங்ஸ்டன் படப்பிடிப்பு நிறைவு | ‛வணங்கான்' படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்: பாலா ஆவேசம் | “இனிமேலாவது என் பெயரை மாற்றுங்கள்”: சுந்தர்.சியிடம் அஞ்சலி வேண்டுகோள் | புஷ்பா 2 - மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் | ஜனவரி 24ல் 6 படங்கள் ரிலீஸ் | தல வந்தால் தள்ளி தான் போகனும் - டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விஜய் கதையில் விஷால்? | தண்டேல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பிரபல நிறுவனம்! | ராம் - மிர்ச்சி சிவா படத்தின் தலைப்பு இதுவா? |
கடந்த 2011ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருந்த படம் ' யோஹன் அத்தியாயம் ஒன்று' . அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதுவரை இப்படத்தை கவுதம் மேனன் உருவாக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால் அடுத்து நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து கிடைத்த கூடுதல் தகவலின்படி, விஷாலை வைத்து கவுதம் மேனன் இயக்கும் படம் ‛யோஹன் அத்தியாயம் ஒன்று' கதைதானாம். இப்போது இந்த காலகட்டத்திற்காக இக்கதையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.