எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
வினோத் இயக்கத்தில் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தில் நடிக்க விருமாண்டி பட நடிகை அபிராமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் மகாராஜா, வேட்டையன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.