‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

பான் இந்தியா படமாக எடுக்க வேண்டுமென்பதற்காக தேவையற்ற பிரம்மாண்டங்கள் படத்தில் இருந்தால் அதை ரசிகர்கள் புறக்கணிக்கும் நிலை வந்துவிட்டது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படம் தோல்வியில் முடியும் நிலைக்கு வந்து நிற்கிறது. பிரம்மாண்டத்திற்கான 'கேம் ஓவர்' என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
முதல் நாள் வசூலாக 186 கோடி வசூல் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தாலும் இந்த ஒரு வாரத்தில் கூட 100 கோடி வசூலை அப்படம் கடக்கவில்லை என்பதுதான் உண்மை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெங்கடேஷ் நடித்து வெளிவந்த 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் மூன்றே நாளில் 100 கோடி வசூலைக் கடந்து தெலுங்கில் 'சங்கராந்தி வின்னர்' ஆக முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'டாகு மகாராஜ்' படமும் நான்கு நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு தனிப் பெரும் வெற்றியை 'கேம் சேஞ்ஜர்' படம் மூலம் பெறலாம் என எண்ணியிருந்த ராம் சரணுக்கு இந்த சங்கராந்தி சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.