100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் ஒரு மாதத்திற்கு முன் திரைக்கு வந்த படம் ‛புஷ்பா -2'. இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பினார் அல்லு அர்ஜுன். மேலும், இந்த படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்கள் வெளியானதால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை இந்த படம் 1,850 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதோடு திரையிடப்பட்ட பல இடங்களில் தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய படங்கள் வெளியானபோதும் இந்த படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த படம் இன்னும் இரண்டு தினங்களில் 2000 கோடியை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அல்லு அர்ஜுன் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இந்த படத்திற்கு இன்னும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தால் இதைவிட கூடுதலான வசூலை பெற்றிருக்கும் என்றும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.