நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார், துபாயில் நடந்து வரும் '24எச்' ரேஸில் அஜித் தலைமையிலான ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றுள்ளது. இதற்கிடையே நேற்று (ஜன.,11) திடீரென ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக அஜித் குமாரின் ரேஸிங் அணி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் 24H கார் ரேஸில் இருந்து அஜித் விலகுகிறார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார். கடினமான மற்றும் தன்னலமற்ற இந்த முடிவை அஜித்தே எடுத்துள்ளார். அஜித் அணி தொடர்ந்து ரேஸில் போட்டியிடும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
அஜித்குமார் இந்த நிகழ்வில் இரண்டு ரோல்களை மேற்கொள்ளவுள்ளார். போர்ஷ்சே 992 கப் கார் (எண் 901) பந்தயத்தில் அணி உரிமையாளராகவும், போர்ஷ்சே கேமேன் ஜிடி4 பந்தயத்தில் ஓட்டுநராகவும் பங்கேற்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜன.,12) நடைபெற்ற போட்டியில் அஜித்குமாரின் அணி போர்ஷ்சே 991 கப் கார் (எண் 901) ரேஸில் 3வது இடம் பிடித்து அசத்தியது. ஒட்டுமொத்த தொடரில் 23வது இடம் பிடித்திருந்தது. மேலும் ஜிடி4 பிரிவில் ‛ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' (Spirit of the race) எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிப்பெற்றதும் இந்திய தேசியக்கொடியுடன் ரசிகர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஜித். அத்துடன், வெற்றிப்பெற்ற அணிகளை கவுரப்படுத்தும்போதும் நமது தேசியக்கொடியுடன் மேடையேறினார்.
அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்திருந்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.