'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் ‛பார்க்கிங், லப்பர் பந்து' என தொடர்ந்து வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டியில் கவினுடன் போட்டி என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "காலம் காலமாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது உள்ளது. ரஜினி, கமல் தொடங்கி அப்படித்தான் பார்த்துள்ளோம். இப்போது வரை அந்த போட்டி தொடரத்தான் செய்கிறது. ஆனால், என்னை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டு பேருக்கு இடையே தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிலும் இப்போது வளர்ந்து வரக்கூடிய வகையைச் சேர்ந்த நடிகர்கள் அனைவருமே போட்டியாளர்கள் தான்.
நாம் வளர்ந்த பிறகு நமது பார்வை மாறலாம். நாம் கடைசியாக நடித்த படத்தின் சாதனையை முறியடிப்பது தான் பெரிய சவால் என்று நினைக்கிறேன். கடைசியாக நான் நடித்த படம் மூலம் எனக்கு சில விஷயங்கள் கிடைத்தன. அந்த படத்தை விட இப்போது நான் நடித்து வரும் படங்களில் சிறப்பாக என்ன செய்யலாம் என பார்க்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். எல்லாருமே நல்ல படம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.