வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமாக இருப்பவர் விஷால். கடந்த வாரம் 'மத கஜ ராஜா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷாலைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிற்க முடியாமல், மைக் பிடித்து பேச முடியாமல், கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க அவரைப் பார்த்த பலரும் 'விஷாலுக்கு என்ன ஆச்சு ?,' என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரது உடல்நிலை குறித்து வழக்கம் போல யு டியூப் சேனல்களில் என்னென்ன கதைகளையோ அளந்துவிட்டார்கள். விஷால் தரப்பிலிருந்து மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஓரிரு அறிக்கைகள் வந்த பிறகு கூட சிலர் பொய் பேசுவதை நிறுத்தவில்லை.
இதனிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற 'மத கஜ ராஜா' படத்தின் பிரிமியர் காட்சியில் விஷால் கலந்து கொண்டார். கடந்த வாரம் பார்த்ததை விடவும் இந்த வாரம் உடல்நலம் தேறி இருக்கிறார். எந்த வித நடுக்கமும் இல்லாமல் பேசினார். கொஞ்சம் சோர்வாக மட்டுமே காணப்பட்டார்.
மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லி இருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் படத்திற்கு வந்து சிறப்பித்து பிரபலப்படுத்த வேண்டும் என்று நேற்று வந்துள்ளார். இன்று காலையில் நடைபெறும் முதல் நாள் முதல் காட்சிக்கும் சென்றுள்ளார்.
நேற்றைய பிரிமியர் காட்சியில் இயக்குனர் சுந்தர் சி, வரலட்சுமி, நிதின் சத்யா, குஷ்பு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து ரசித்தார்கள்.




