ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
விஜய்யின் கடைசி படமாக அவரது 69வது படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கி வரும் இந்தப் படம் தெலுங்குப் படமான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
'பகவந்த் கேசரி' படத்தை இயக்கியவர் அனில் ரவிப்புடி. தற்போது 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்தை இயக்கியுள்ளளார். இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் ‛விஜய் 69' பற்றிய தகவலை விடிவி கணேஷ் பேசினார்.
“பகவந்த் கேசரி' படத்தை விஜய் ஐந்து முறை பார்த்தார். அந்தப் படத்தை ரீமேக் செய்து அனில் ரவிப்புடியை இயக்கச் சொன்னார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்,” என விடிவி கணேஷ் பேசினார்.
உடனே அதை மறுத்த அனில் ரவிப்புடி, “விஜய் 69 குழுவினர் அதை ரீமேக் என அறிவிக்கவில்லை. அதனால், அது பற்றி இப்போது விவாதிக்க முடியாது. எனக்கு விஜய் சார் மீது பெரிய மரியாதை உண்டு. அவருடைய பணிபுரிய எனக்கு நேரம் அமையவில்லை,” என்று பதிலளித்தார்.
'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காக விஜய் 69 உருவாகிறது என்பதை சொல்ல வந்த விடிவி கணேஷின் பேச்சை அப்படியே மடை மாற்றிவிட்டார் அனில் ரவிப்புடி.