பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி வெளியாகிறது | வெற்றியின் ரகசியத்தை சொன்ன நயன்தாரா | பாடகர் அறிவு திருமணம் : இளையராஜா வாழ்த்து | 'வின்டேஜ் ஷங்கர்' எனப் புகழும் கார்த்திக் சுப்பராஜ் | பரபரப்பில்லாமல் போன பொங்கல் வெளியீடுகள் | ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்க : வடிவேலு | பாலிவுட்டின் மகா ஆரோக்கிய கேம்ப் அறிமுக விழாவில் விந்து தாரா சிங், பூனம் தில்லான் | வெள்ளிக்கிழமை பட ரிலீஸிற்கு கோர்ட் முன் காத்திருக்கும் திரைப்பட துறையினர் | 'கேம் சேஞ்ஜர்' முதல் நாள் வசூல் 186 கோடி | அஞ்சலிக்கு இந்த வருடம் இரட்டைப் பொங்கல் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின் வாங்கியதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் அவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக ஏப்ரல் பத்தாம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தின் டிரைலர் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில், அந்த டிரைலரில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், விடாமுயற்சி படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், 2 மணி நேரம் 30 நிமிடங்கள், 34 வினாடி ரன்னிங் டைம் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அனேகமாக படம் ஜன., 23 அல்லது ஜன., 30ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.