படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே .சூர்யா, அஞ்சலி, சமுத்திரகனி நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் 'கேம் சேஞ்ஜர்'. ஷங்கர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு ராம்சரண் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் இன்று திரைக்கு வந்துள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதோடு இந்த படம் திரைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையதளங்களில் ஹெச்டி பிரிண்டில் இந்த படம் கசிந்து வருகிறது. இதனால் பலரும் இலவசமாகவே டவுன்லோட் செய்து வருகிறார்கள். இது கேம் சேஞ்ஜர் படக்குழுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.