'துருவ நட்சத்திரம், நரகாசூரன்' வெளியாக வாய்ப்பிருக்கிறதா? | பரபரப்பை ஏற்படுத்திய 'மத கஜ ராஜா' ரிலீஸ் அறிவிப்பு | 'புஷ்பா 2' டிரைலர் சாதனையை முறியடிக்காத 'கேம் சேஞ்சர்' டிரைலர் | அமெரிக்க வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்கள் | எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது |
நடிகர் ஜெயம் ரவியின் ‛அகிலன், இறைவன், சைரன், பிரதர்' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இந்த படங்களுக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவருடன் நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முழு நீள காதல் படமாக உருவாகி உள்ள இதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருந்த அஜித்தின் ‛விடாமுயற்சி' படம் தள்ளிப்போனதால் அந்த இடத்தை நிரப்ப ஏற்கனவே 4 சிறிய படங்கள் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இப்போது காதலிக்க நேரமில்லை படமும் பொங்கல் ரேஸில் குதிக்கிறது. இப்படம் ஜன., 14ல் பொங்கல் பண்டிகை அன்றே ரிலீஸாவதாக புத்தாண்டு தினமான இன்று(ஜன., 1) அறிவித்துள்ளனர்.