பரபரப்பை ஏற்படுத்திய 'மத கஜ ராஜா' ரிலீஸ் அறிவிப்பு | 'புஷ்பா 2' டிரைலர் சாதனையை முறியடிக்காத 'கேம் சேஞ்சர்' டிரைலர் | அமெரிக்க வசூலில் சாதனை படைத்த டாப் 10 படங்கள் | எனது வாழ்க்கையை வடிவமைத்த அம்மா - ஹேமமாலினி நெகிழ்ச்சி | 'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து அக்., 31ல் வெளியான ‛அமரன்' படம் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வந்தது. தமிழ் சினிமாவில் 2024ல் அதிக லாபம் தந்த படமாக அமரன் உள்ளது. பிறமொழிகளிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அமரன் படத்தை இருநாட்களுக்குமுன் பார்த்த நடிகை ஜான்வி கபூர் அதுபற்றி குறிப்பிடும்போது, ‛‛இந்த படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் ஆச்சர்யமான, உருக்கமான படம். 2024 ஐ முடிக்க ஒரு சிறப்பான படம். மனதை தொட்ட, மனதை கனக்க செய்த ஒரு படத்தை பார்த்தேன்'' என உருகி பதிவிட்டுள்ளார்.