அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பாலா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வணங்கான்'. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தற்போது ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று வெளியீட்டு நாளை அறிவித்துள்ளார்கள்.
அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம், ஷங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்' படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. அதனால், 'வணங்கான்' படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், படத்தைத் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார்கள். 'விடாமுயற்சி' படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படமும் பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.