இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ் தந்தை வழியில் தானும் இசை அமைப்பாளராகிறார். அதற்கு முன்னோட்டமாக தற்போது 'ஐயையோ' என்ற இசை ஆல்பத்தின் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். இந்த ஆல்பத்திற்கு இசை அமைத்து பாடி, நடித்தும் உள்ளார். இந்த ஆல்பத்தை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. 'ஐயையோ' பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத, சனா மரியம் இயக்கியுள்ளார். ஜாயித் தன்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆலிஷா அஜித் நடனம் அமைத்துள்ளார்.
இதுகுறித்து சாமுவேல் நிக்கோலஸ் கூறும்போது, "ஏழாம் அறிவு' படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும், பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். 'தேவ்' திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது 'ஐயையோ' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி," என்றார்.