நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. சரத்குமாரின் 150வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆழியா என்னும் குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆழியா, நடிகர் சரத்குமாரை பார்த்து ‛அங்கிள்' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதுக்குறித்து பேசிய சரத்குமார், ‛‛நான் எப்போதும் இளமை தான்; எனக்கு வயசு ஆகவே ஆகாது. ஆழியா வளர்ந்து என்னுடைய படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'' என்றார். அப்போது செய்தியாளர்கள் ‛சூர்யவம்சம் 2' குறித்த அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‛‛அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விரைவில் அறிவிப்பார்'' என்றார்.