மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... |
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த ‛பிரதர்' படம் தோல்வி அடைந்த நிலையில், தனது அடுத்த படங்களான ‛காதலிக்க நேரமில்லை, ஜீனி' படங்களை அதிகம் நம்பியுள்ளார். இதில் காதலிக்க நேரமில்லை படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். ஜீனி படத்தை அர்ஜூனன் இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல், இயக்குனர்கள் சுதா கொங்கரா, கணேஷ் கே.பாபு ஆகியோரின் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தொடர் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் ஓய்வுக்காக மெக்சிகோ சென்றுள்ள ஜெயம் ரவி, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ‛செல்லும் இடங்களும், இலக்குகளும் மாறலாமே தவிர, விதி எப்போதுமே மாறாது' எனக் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து உள்ளிட்ட தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டே ஜெயம் ரவி இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.