தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛காதலிக்க நேரமில்லை'. இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வரும் ஜெயம் ரவி இன்னொரு பக்கம் குடும்ப பிரச்னையிலும் சிக்கித் தவிக்கிறார். இந்த நிலையில் இந்த காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றியை அவர் ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த படத்தில் ஆச்சரியமாக டைட்டில் கார்டில் நாயகி நித்யா மேனனின் பெயர் முதலாவதாகவும் அதற்கடுத்து ஜெயம் ரவியின் பெயரும் இடம் பெறுகிறது. இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பேசிய ஜெயம் ரவி, ‛‛வழக்கமாக இருக்கும் அதே நடைமுறையை பின்பற்ற வேண்டாமே, அதை உடைத்து பார்ப்போமே என்றுதான் இப்படி செய்தோம். என் மீது உள்ள தன்னம்பிக்கையும் இதற்கு காரணம். ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் இதே முறையைத்தான் பின்பற்றுவார். அவரிடம் இருந்து தான் இதை நான் காப்பி அடித்தேன்'' என்று கூறியுள்ளார்.




