சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ஹைதராபாத் : “ஹைதராபாத் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானது குறித்து கூறப்பட்ட போதும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு உடனே வெளியேற மறுத்தார்,” என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி நடிகர்கள் அல்லு அர்ஜுன் நடித்த, 'புஷ்பா - 2 தி ரூல்' என்ற படத்தின் சிறப்பு இரவு காட்சி திரையிடப்பட்டது.
இந்த படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக ரேவதி, 35, என்பவர் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது ரசிகர்களுடன் படத்தை பார்ப்பதற்காக படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனும் வந்தார். அவரை பார்ப்பதற்காக தியேட்டருக்குள் கூட்டம் அலைமோதியது. இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி மற்றும் அவரது 12 வயது மகன் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: புஷ்பா படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருவதாகக் கூறி டிச., 2ல் போலீசில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி, போலீசார் அந்த மனுவை நிராகரித்துவிட்டனர். அனுமதி மறுத்த பிறகும், நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்தார். வரும் போது, காரின் மேற்புறத்தில் உள்ள ஜன்னலை திறந்து, அதன் வழியே நின்றவாறு ரோட் ஷோ நடத்தினார்.
இதன் காரணமாகவே கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த தகவல் தெரிந்தும் தியேட்டரை விட்டு அவர் உடனே வெளியேறவில்லை. போலீசார் அவரை வெளியேற்றினர். இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை இனி தெலுங்கானாவில் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில், ''முதல்வரின் குற்றச்சாட்டுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. தியேட்டருக்கு செல்லும் போது நான் எந்த ரோட்ஷோவும் நடத்தவில்லை. வாகனத்தில் இருந்தபடி ரசிகர்களை பார்த்து கையை தான் அசைத்தேன்,'' என்றார்.