ஹிந்தியில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'புஷ்பா 2' | சீனாவில் 'பாகுபலி 2' வசூலை மிஞ்சிய 'மகாராஜா' | ராஷ்மிகா பார்த்து வியந்த விஜய் - த்ரிஷா | ‛பேபி ஜான்' படம் ‛தெறி' படத்தின் முழுமையான ரீமேக் அல்ல : இயக்குனர் அட்லி | ரஜினி பெரிய நடிகர் என்பதே தெரியாது: சொல்கிறார் நயன்தாரா | வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் செய்ய போகிறார் அஜித் | பிப்ரவரி மாதத்தில் துவங்கும் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் | ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி' | புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை : அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார் |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும், ஒரு பாடலுக்கு ஆடியவருமான அனுராதா ஒருசமயம் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார் என்பது சுவாரஸ்மான தகவல். ஒரு காலத்தில் வெள்ளிவிழா படங்களாக கொடுத்த ஸ்ரீதர், தன் கடைசி காலத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தார். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று 'மோகன புன்னகை'. இந்த படத்தில் சிவாஜி நாயகனாக நடித்தார். அவர் காதலிக்கும் பெண்களாக கீதா, பத்மபிரியா, ஜெயபாரதி, மற்றும் அனுராதா நடித்தனர்.
சிவாஜியை ஒரு தலையாக அனுராதா காதலிப்பார். ஆனால் சிவாஜி தனக்கு பல காதல் தோல்விகள் இருந்ததால் அதனை மறுத்து இன்னொருவருக்கு அனுராதாவை திருமணம் செய்து வைப்பார். இந்த படத்தில் இவர்களுடன் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சின்னி பிரகாஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். பெரும்பாலான படம் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தது. படத்தின் கதை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. படமும் தோல்வி அடைந்தது.