பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
தமிழ் சினிமாவின் முதல் ஆந்தாலஜி படம் 'சிரிக்காதே'. இந்த படம் பெரிய வெற்றி பெற்றதும். அதே பாணியில் அடுத்து வந்த படம் 'மணிமாலை'. இதில் 4 காமெடி கதைகள் இடம் பெற்றது. 'ஆஷாடபூபதி' என்ற கதையில் பி.பி.ராகவாச்சாரியும், ஜெயாவும் நடித்திருந்தனர். 'அபூதி அடிககள்' என்ற கதையில் பி.பி.ரங்காச்சாரியும் டி.என்.மீனாட்சியும் நடித்திருந்தனர். 'மைனரின் காதல்' என்ற கதையில் டி.எஸ்.துரைராஜும், கே.எஸ்.ஆதிலட்சுமியும் நடித்திருந்தனர், 'நவீன மார்கண்டேயன்' படத்தல் காளி என்.ரத்தினமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.
நான்கு கதைகளையும் நான்கு தனித்தனி இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். முழு படமும் கிண்டி வேல்ஸ் ஸ்டூடியோவில் படமானது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் தவிர்த்து அப்போதிருந்த அனைத்து காமெடி நடிகர்களும் நடித்திருந்தார்கள். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் இரண்டாவது ஆந்தாலஜி படமானது 'மணிமாலை'.