நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
80களில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனுராதா, பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இவரது மகள் அபிநயஸ்ரீயும் படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வாய்ப்புகள் அமையாததால் நடன இயக்குனர் ஆனார். அனுராதாவின் மகன் கெவின் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜே.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள பூம் பூம் காளை படத்தில் கெவின் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.டி.குஷால் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் சிவலிங்கா படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, சச்சு, கிரேன் மனோகர், அபிநயஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.டி.குஷால் கூறியதாவது: நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே. அது நடப்பது எப்போது என பூம் பூம் காளையாக அலைபாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். என்றார். படம் நாளை வெளிவருகிறது.