சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படத்தில் தனுசின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அன்று முதல் ஆடுகளம் முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார். மௌனகுரு படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்தன் மூலம் மேலும் பிரபலமானார். குட்டிப் புலி, தகராறு , கண் பேசும் வார்த்தைகள் , தடையறத் தாக்க, முகமூடி, இது கதிர்வேலன் காதல், குக்கூ, விசாரணை, சைத்தான் உள்பட பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஹீரோவின் நண்பர், அல்லது வில்லனின் அடியாள் மாதிரியான கேரக்டரில் நடித்தார்.
தற்போது முதன் முறையாக ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜகா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இயக்குகிறார். வி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் பாஸ்கர் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ரா.விஜயமுருகன் கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி அந்த இடத்தை கைப்பற்ற ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது. ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி. காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் முடிந்தது. என்றார்.