ஹிந்தியில் மேலும் ஒரு சாதனை படைத்த 'புஷ்பா 2' | விடுதலை 2 - யாருக்கு முக்கியத்துவம் அதிகம்? | தியேட்டர் நெரிசல் சம்பவம் ; தாய் இறந்த நிலையில் மகன் மூளைச்சாவு : சிக்கலில் அல்லு அர்ஜூன் | நடிகர் அஜித் பற்றி சிலாகித்த மஞ்சு வாரியர் | சூரிக்கு அக்காவான ஸ்வாசிகா | ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன: அடுத்த படம் குறித்து அட்லி சூசகம் | கணேஷ் ஆச்சார்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : 'மீண்டும் கோகிலா' படத்திலிருந்து விலகிய மகேந்திரன், ரேகா | தமிழுக்கு வந்த துளு நடிகை | தமிழில் வெளியாகும் 'க்ரேவன் தி ஹண்டர்' |
நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார் நடிகை மஞ்சு வாரியர். தற்போது விஜய் சேதுபதியின் ஜோடியாக இவர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் நாளை ரிலீசாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மஞ்சுவாரியர், நடிகர் அஜித் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: அஜித்குமார் சார் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக பேசுவார். எனக்கு சிறிய வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்பது ஆசை. நான் எனது பக்கெட் லிஸ்டில்கூட இதுபற்றி எழுதி வைத்திருக்கிறேன்.
அஜித் சாருக்கு பைக் மீதிருக்கும் ஆர்வம் என்னையும் எனது ஆசை மீது ஏதாவது செய்ய வேண்டுமென தூண்டியது. அவருக்கு பிடித்ததை செய்ய நேரம் ஒதுக்கி செய்கிறார். நமக்கு பிடித்ததை செய்ய அஜித் சாரைப் பார்த்து நானும் எங்கேயோ ஊக்கமடைந்திருக்கிறேன். நமக்கு பிடித்ததை செய்ய அவரும் ஒரு காரணமாக இருக்கிறார். பைக் நம்மை மன்னிக்காது. நாம் சரியாக பயன்படுத்தினால் அதுவும் சரியாக வேலை செய்யும் என அஜித் கூறியுள்ளார். இவ்வாறு மஞ்சுவாரியர் பேசியுள்ளார்.