'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும், முக்கிய வேடத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்று வரும் நிலையில், சூரிக்கு அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்வாசிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய மகனுக்கும், சூரிக்கும் இடையேயான பாசப் போராட்டமே படத்தின் கதைகளமாக கொண்டு உருவாகி வருகிறது. ஸ்வாசிகா 'லப்பர் பந்து' படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மனைவியாக நடித்திருந்தார்.