கூலி படப்பிடிப்பில் உபேந்திராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான் | சீனாவிலும் மகாராஜாவின் வெற்றி : இயக்குனர் நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்பிலான கார் பரிசளித்த தயாரிப்பாளர் | சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு பெண் குழந்தை | விஜய் சேதுபதியை விமர்சித்த பிக்பாஸ் அர்ச்சனா | அல்லு அர்ஜுன் ஜாமீன் : உச்சநீதிமன்றத்தை நாடும் போலீஸ்? | ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை |
கன்னட திரையுலகில் இயக்குநர், நடிகர் என வெற்றிகரமான இருமுகம் கொண்டவர் உபேந்திரா. அதிரடி கருத்துக்களை சொல்லும் படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தமிழில் விஷால் நடித்த சத்யம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு பங்கு பெற ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
அதே சமயம் உபேந்திரா, தானே இயக்கி நடித்துள்ள யூஐ (UI) என்கிற திரைப்படமும் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசரை பார்த்த அமீர்கான் ஆச்சர்யப்பட்டு போய், கூலி படப்பிடிப்பில் உபேந்திராவை தன்னுடைய கேரவனுக்கு வரச் சொல்லி அழைத்து இந்த டீசர் பற்றி புகழ்ந்து தானே ஒரு வீடியோ எடுத்து அதை உபேந்திராவுக்கு கொடுத்து இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல மறுநாள் போன் செய்து அந்த வீடியோவை உங்களது இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்து விட்டீர்களா என்றும் பாலோ செய்துள்ளார்.
“ஒரு மிகப்பெரிய நடிகர், என்னைப் போன்ற ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிகருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி, நான் கேட்காமலேயே என் படத்தை புரமோட் செய்ய நினைக்கிறார். இவர்களைப் போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து மனித நேயம், உற்சாகம் என கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன” என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார் உபேந்திரா.