பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

97வது அகாடமி விருதுகளுக்கான போட்டியில் இந்தியாவில் இருந்து 'லாபட்டா லேடீஸ்' என்ற படம் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல சிறந்த இசைக்கான இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த 'ஆடுஜீவிதம்' படம் இடம் பெற்றது. தற்போது இறுதிப்போட்டி பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் லாபட்டா லேடீஸ் படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் இடம் பெறவில்லை. விருது விழா மார்ச் 2ம் தேதி நடக்கிறது.
இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு படங்கள் வருமாறு : ஐ எம் ஸ்டில் ஹியர் (பிரேசில்), யுனிவர்சல் லாங்குவேஜ்( கனடா), வேவ்ஸ் (கிரீச்), தி கேர்ள் வித் தி நீடில்(டென்மார்க்), எமிலியா பெர்ஸ்(பிரான்ஸ்), தி சீட் ஆப் தி ஸேக்ரட் பிக்(ஜெர்மனி), டச் (ஐஸ்லேண்ட்), கினீகப்(அயர்லாந்து), வெர்மிகிலியோ (இத்தாலி), புளோ (லட்வியா), அர்மண்ட்(நார்வே), பிரம் கிரவுண்ட் சீரோ (பாலஸ்தீனம்), டாகாமே (செனேகல்), ஹவ் டூ மேக் மில்லியன்ஸ் பிபோர் கிராண்ட்மா டைஸ் (தாய்லாந்து), சந்தோஷ் (இங்கிலாந்து).