செல்வராகவனுடன் மூன்றாவது முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் | கீர்த்தி சுரேஷ் திருமணம் : நேரில் சென்று வாழ்த்திய விஜய் | மிஸ் யூ தள்ளிப்போன விரக்தி ; தொடர்ந்து புஷ்பா 2 மீது சித்தார்த் காட்டம் | பாலியல் வழக்கில் இயக்குனர் பாலச்சந்திர மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ; புகார்தாரருக்கு குட்டு | தமன்னா பட நடிகர் கடத்தப்பட்டு 12 மணி நேரம் சித்ரவதை ; சாமர்த்தியமாக தப்பினார் | காதலர் ஆண்டனியை மணந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் : கோவாவில் திருமணம் கோலாகலம் | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்துக்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்து பாராட்டுக்களை பெற்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதன் காரணமாக அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கும் அவர் கமிட்டாகி இருக்கிறார். அதோடு சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.
இப்படியான நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கும் தான் இசையமைக்கபோவதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் ஜி.வி .பிரகாஷ். அந்த பதிவில், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாகவும் இணைய போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.