ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
பாலிவுட்டில் ஓரளவு பிரபலமான நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் முஸ்தாக் கான். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஸ்ட்ரீ 2 படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இவர் சில நபர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய பரபரப்பு செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 20ம் தேதி மீரட்டில் நடைபெற உள்ள ஒரு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி தொலைபேசியிலேயே முஸ்தாக் கானை சிலர் தொடர்பு கொண்டனராம். அதற்காக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் பேசி அட்வான்ஸ் பணமும் அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். அது மட்டுமல்ல அவருக்கு விமான டிக்கெட் எடுத்தும் அனுப்பி உள்ளனர். சம்பந்தப்பட்ட நிகழ்வு நடக்கும் தினத்தன்று விமானத்தில் மீரட் வந்து இறங்கிய முஸ்தாக் கானை காரில் அழைத்துச் சென்ற சில நபர்கள் தனியாக இருக்கும் ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்தனர்.
அப்போதுதான் தான் கடத்தப்பட்ட விஷயம் முஸ்தாக் கானுக்கு தெரிய வந்தது. அவரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் தான் உங்களை உயிருடன் விடுவோம் என பேரம் பேசி உள்ளனர் அந்த நபர்கள். ஆனாலும் அதில் சரியான உடன்பாடு எட்டப்படவில்லை. ஒரு வழியாக அவரை டார்ச்சர் செய்து அவரிடம் இருந்தும் அவரது மகன்கள் வங்கிக் கணக்கில் இருந்தும் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வரை தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டார்களாம்.
அந்த சமயத்தில் அருகில் இருந்த மசூதியில் இருந்து தொழுகை நேரத்திற்கான பாங்கு அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர்களது கவனம் அந்தப்பக்கம் திரும்பியபோது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிய முஸ்தாக் கான் அந்த பகுதியில் இருந்த மக்கள் உதவியுடன் காவல் நிலையம் சென்று தான் கடத்தப்பட்ட விவரம் குறித்து தெரிவித்தார். ஆனாலும் போலீசார் வருவதற்குள் அந்த கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்களாம். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் தான் இந்த கடத்தல் சம்பவமே வெளிச்சத்துகு வந்துள்ளது.
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணன் கடத்தல் சம்பவத்தில் 'டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் யா.. பாத்து போட்டு குடுங்க என கவுண்டமணியிடம் சொல்வார் செந்தில். அதுபோல முஸ்தாக் கானை கடத்திய நபர்களுக்கு அவர்கள் இதற்காக செலவு செய்து காசாவது கைக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.