'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்லீன் ராயல். ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பாடி உள்ளார். சமீபத்தில் பிரபல தென்னிந்திய நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரை சந்தித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதுபற்றி, ‛‛என்னுடைய அற்புதமான பயணத்தின் துவக்கம் ஹிரியே மற்றும் சமீபத்திய அத்தியாயம் சாஹிபா. உங்கள் அன்பு தொடர்ந்து என் இசையைத் தூண்டுகிறது. இந்த கனவை நனவாக்கியதற்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார் ஜஸ்லீன்.
ஜஸ்லீன் இந்த இரண்டு நட்சத்திரங்கள் உடன் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். துல்கர் சல்மானை வைத்து ஹிரியே ஹிரியே என்கிற சூப்பர் ஹிட் ஆல்பத்தையும், விஜய் தேவரகொண்டாவை வைத்து சாஹிபா என்ற ஹிட் ஆல்பத்தையும் இவர் கொடுத்துள்ளார். இவற்றில் ஹிரியே பாடல் உலக இசை பாடல்களின் தரவரிசையில் பிரபலமானவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.