சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அப்டேட் | ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர் | ராமேஸ்வரம் பின்னணியில் ‛கார்த்தி 29' படம் | சிம்புக்காக கதை ரெடி பண்ணும் பார்க்கிங் பட இயக்குனர் | 12 கிலோ உடல் எடையை குறைத்த ரேஷ்மா பசுபுலேட்டி | ஒரே நாளில் சமுத்திரக்கனியின் இரண்டு படங்கள் ரிலீஸ் | ஹிந்தியில் மேலும் ஒரு சாதனை படைத்த 'புஷ்பா 2' | விடுதலை 2 - யாருக்கு முக்கியத்துவம் அதிகம்? | தியேட்டர் நெரிசல் சம்பவம் ; தாய் இறந்த நிலையில் மகன் மூளைச்சாவு : சிக்கலில் அல்லு அர்ஜூன் | நடிகர் அஜித் பற்றி சிலாகித்த மஞ்சு வாரியர் |
தனுஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
அறிவு எழுதி சுபலாஷினி, ஜிவி பிரகாஷ்குமார், தனுஷ், அறிவு ஆகியோர் பாடிய அந்தப் பாடலுக்கு பிரியங்கா மோகன் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். அப்பாடல் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அதனால், சுமார் மூன்று மாதங்களிலேயே யு டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதே கால கட்டத்தில் வெளியான 'தி கோட்', 'வேட்டையன்' ஆகிய படங்களின் பாடல்களை விடவும் இந்தப் பாடல் விரைவாக 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில் வந்த பாடல்களில் “தெறி - என் ஜீவன்”, “தெறி - ஈனா மீனா டீக்கா”, “சூரரைப் போற்று - காட்டுப் பயலே”, “வாத்தி - வா வாத்தி”, ஆகிய பாடல்களை அடுத்து 100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 5வது பாடலாக இந்த 'கோல்டன் ஸ்பாரோ' அமைந்துள்ளது.