நடிகர் அஜித் பற்றி சிலாகித்த மஞ்சு வாரியர் | சூரிக்கு அக்காவான ஸ்வாசிகா | ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன: அடுத்த படம் குறித்து அட்லி சூசகம் | கணேஷ் ஆச்சார்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : 'மீண்டும் கோகிலா' படத்திலிருந்து விலகிய மகேந்திரன், ரேகா | தமிழுக்கு வந்த துளு நடிகை | தமிழில் வெளியாகும் 'க்ரேவன் தி ஹண்டர்' | பிளாஷ்பேக் : முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பி.யூ.சின்னப்பா | ஆஸ்கர் போட்டியில் நுழைந்த இந்தியர்கள் உருவாக்கிய படம் | ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான், 'லாபட்டா லேடீஸ்' |
உலக அளவில் தேடுதல் இணையதளங்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது கூகுள். நமக்கு எது வேண்டும் என்றாலும் உடனே கூகுள் இணையதளத்தில் சென்றுதான் நாம் தேடுவோம். 2024ம் ஆண்டுக்கான தேடுதலில் எவையெவை அதிகம் தேடப்பட்டன என்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய அளவில் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. முதல் இடத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடித்த ஹிந்தி படமான ஸ்திரீ 2-யும், இரண்டாம் இடத்தில் பிரபாஸ், கமல், தீபிகா நடித்த கல்கி 2898 ஏடி படமும், மூன்றாம் இடத்தில் விக்ராந்த் மாசே நடித்த 12வது பெயில் படமும் இடம் பிடித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த 'மகாராஜா' திரைப்படம் அந்தப் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் கூட 8வது இடத்தையே பிடித்துள்ளது ஆச்சரியம்தான். தியேட்டர்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' படம் 100 கோடி வசூலைக் கடந்தது. பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாகி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. தற்போது சீனாவிலும் வெளியாகி நன்றாக ஓடி வருகிறது. 160 கோடி வசூலைக் கடந்துள்ளது.
கூகுளில் தேடப்பட்ட டாப் 10 இந்தியத் திரைப்படங்கள் பட்டியல்...
1. ஸ்திரீ 2
2. கல்கி 2898 ஏடி
3.12வது பெயில்
4.லாபட்டா லேடீஸ்
5. ஹனுமன்
6. மகாராஜா
7. மஞ்சும்மேல் பாய்ஸ்
8. தி கோட்
9. சலார்
10. ஆவேஷம்
இந்தப் பட்டியலில் 3 ஹிந்திப் படங்கள், 3 தெலுங்குப் படங்கள், 2 தமிழ்ப் படங்கள், 2 மலையாளப் படங்கள் இடம் பெற்றுள்ளன.