2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர். மோகன்பாபுவின் வீட்டில் அவருடைய இரண்டாவது மகன் மஞ்சு மனோஜ், சொத்து விவகாரம் குறித்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்பு, மோகன் பாபு, மனோஜ் இடையே கைகலப்பு நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். ஆனால், பின்னர் இருவரும் அதை மறுத்தனர். இந்நிலையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் மனோஜ். இதனிடையே, நேற்று ஹைதராபாத்தில் உள்ள மோகன் பாபுவின் வீட்டிற்கு மனோஜ் சென்றுள்ளார். அவரை உள்ளே விடாமல் மோகன் பாபுவின் செக்யூரிட்டிகள் தடுத்துள்ளனர். கேட்டை தள்ளிவிட்டு மனோஜ் உள்ளே நுழைந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த டிவி நிருபர்கள் பலரும் மோகன் பாபுவிடம் பேட்டி எடுக்கச் சென்றனர். அப்போது டிவி 9 நிருபரின் மைக்கைப் பிடுங்கி அவரை பலமாக அடித்துள்ளார் மோகன் பாபு. அதில் அந்த நிருபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு கருதி மோகன்பாபுவிடம் இருந்தும், மனோஜிடம் இருந்தும் அவர்களது துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்.