விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் டிசம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்தது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் புஷ்பா- 2 படத்தின் சிறப்பு காட்சி பார்க்க சென்ற ரேவதி என்ற ஒரு ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் . அவருடைய மகன் தேஜ் என்பவர் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகை உயிரிழந்திருப்பது படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக படத்தின் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன். அதோடு புஷ்பா -2 பட குழுவினர் ரேவதியின் குடும்பத்திற்கு உதவி செய்ய தயாராக உள்ளார்கள். விரைவில் அவரது குடும்பத்தாரை நேரில் சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.