வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
மேஜர் சுந்தர்ராஜன் என்றாலே ஆங்கிலம் கலந்து பேசும் அந்த கண்டிப்பான அப்பா கேரக்டர்கள்தான் நினைவுக்கு வரும். சிவாஜியின் நெருங்கிய நண்பரான இவர் சிவாஜியை போன்று நாடகத்தில் இருந்து வந்தவர். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக கம்பெனியில் கம்பெனி நடிகராக இருந்தார். தொலைபேசி துறையிலும் பணியாற்றினார். அவர் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பே.பாலச்சந்தர் திரைப்படமாக்கியபோது அதில் அவர் நடித்த தந்தை கேரக்டரை சினிமாவிலும் நடித்தார்.
அதன் பிறகு அவர் 90 சதவிகித படங்களில் தந்தை கேரக்டரில்தான் நடித்தார். ஆனால் அவர் சில படங்களை இயக்கினார் என்பது பலருக்கு தெரியாது. சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்தின் மூலம் இயக்குனரானார். 'கல்தூண்' என்ற நாடகத்தையே திரைப்படமாக இயக்கினார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், திலக் ஆகியோருடன் மேஜர் சுந்தர்ராஜனும் நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பிறகு ஊரும் உறவும், நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான் படங்களை இயக்கினார். கடைசியாக கமல் நடித்த 'அந்த ஒரு நிமிடம்' படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.