'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் |

மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மகத்தான கலைப் படைப்புகளில் ஒன்றாக, இன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் அமரத்துவம் வாய்ந்த அற்புத கலைப் பெட்டகமாக உருவான “அடிமைப் பெண்” திரைப்படத்தின் சில அறிந்திராத பக்கங்களைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம். இயக்குநர் கே சங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய திரைப்படமாக பார்க்கப்படும் இந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தை பாராட்டாத திரை ஆர்வலர்களும் இல்லை, திரை வல்லுனர்களும் இல்லை. 1969ல் வெளிவந்து, 25 வாரங்கள் ஓடி மாபெரும் வசூலை அள்ளித் தந்த இத்திரைக் காவியத்தை “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்” சார்பில் எம் ஜி ஆரே தயாரித்து, மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்தும் இருந்தார்.
இயக்குநர் கே சங்கரின் இயக்கத்தில் 1967க்கு முன்பே இந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தின் உருவாக்கம் ஆரம்பமாகியிருந்தது. அதில் சரோஜாதேவி, கே ஆர் விஜயா மற்றும் ஜெயலலிதா என மூன்று நாயகியர் நடித்துமிருந்தனர். இதனை உறுதி செய்யும் பொருட்டாக, 1966ம் ஆண்டு எம் ஜி ஆர் மற்றும் சரோஜாதேவி நடிப்பில் ஆர் எம் வீரப்பன் தயாரித்து “சத்யா மூவீஸ்” சார்பில் வெளிவந்த “நான் ஆணையிட்டால்” என்ற திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியான “நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்” என்ற பாடலின் இடையே “நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்” என்று எம் ஜி ஆர் பாடுவது போல் வரும் காட்சியில் “அடிமைப் பெண்” என்ற விளம்பரம் பளிச்சிடுவதாக காட்டியிருப்பர்.
அதன் பின் எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு, குணமாகி மீண்டும் நடிக்க வந்து, படப்பிடிப்பைத் தொடங்கிய போது சரோஜாதேவி மற்றும் கே ஆர் விஜயா ஆகிய இருவரும் இல்லாமல் ஜெயலலிதாவிற்கு மட்டும் இரட்டை வேடம் தரப்பட்டிருந்தது. நாயகி, வில்லி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயலலிதா. கே ஆர் விஜயா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஜஸ்ரீயை நடிக்க வைத்திருந்தனர். பிரமாண்டமான அரங்க அமைப்புகள் அமைத்து அதுவரை படமாக்கப்பட்டிருந்த பழைய “அடிமைப் பெண்” படத்தின் படச்சுரளையும் துணிந்து தூக்கி எறிந்திருந்தார் எம் ஜி ஆர். மீண்டும் புதிய வடிவில் உருவாக்கம் செய்யப்பட்ட “அடிமைப் பெண்” திரைப்படம் 1969ம் ஆண்டு மே 1 அன்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டு ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு. மேலும் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் முதல் பரிசினையும் வென்றெடுத்தது இந்த “அடிமைப் பெண்”.




