சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

‛ஆர்ஆர்ஆர்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் வெளியான ‛தேவரா' படமும் அவருக்கு ஓரளவு வெற்றி படமாகவே அமைந்தது. ‛ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் கவனம் பெற்ற நடிகராக மாறிவிட்டார். இதனை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‛வார்-2' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் இந்திய சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விரைவில் மும்பையில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து பங்குபெறும் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சி தொடர்ந்து 15 நாட்கள் படமாக்கப்பட இருக்கின்றன. இது குறித்து படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி கூறும்போது, “எந்த ஒரு ஆக்சன் படத்திற்கும் இல்லாத வகையில் எடுக்கப்படும் மிகப்பெரிய கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தான்.. காரணம் இந்த படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு நடிகர்கள் இந்த ஆக்சன் காட்சியில் பங்கேற்க இருப்பது, இந்த கிளைமாக்ஸ் காட்சியை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறியுள்ளார். இந்த சண்டைக் காட்சிக்காக மிகப்பெரிய செலவில் செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது.




