'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி |

யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிக்கும் படம் 'பேமிலி படம்' (படத்தின் பெயரே இதுதான்). இதில் உதய் கார்த்திக் மற்றும் சுபிக்ஷா கயா நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர விவேக் பிரசன்னா, பூஜா ரவி, மோகனசுந்தரம், பார்த்திபன் குமார், கவின் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு அனிவி இசை அமைத்துள்ளார். அஜிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது: திரைப்படம் இயக்க வாய்ப்பு தேடி அலையும் உதய் கார்த்திக், தனது லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். அவருக்கு குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அவருக்காக குடும்பமே சேர்ந்து ஒரு படம் எடுக்கிறது. படத்தில் வில்லன்கள் கிடையாது. கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும், சந்தர்ப்பங்களும் எதிர்மறையாக நிற்க, அவற்றை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது மீதி கதை. சென்னை மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது. என்றார்.