சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் டீசரை நேற்று இரவு திடீரென வெளியிட்டார்கள். டீசர் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்புதான் அதற்கான முன்னறிவிப்பும் வந்தது.
இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக அஜித் படங்களே வெளியாகாத நிலையில், எப்போது வந்தால் என்ன என அஜித் ரசிகர்களும் ஆரவாரத்துடன் டீசரை வரவேற்றுள்ளார்கள். தற்போது வரையில் 5 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.
முற்றிலும் வெளிநாட்டில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது டீசரிலேயே தெரிகிறது. 1997ல் வெளிவந்த 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாக இந்தப் படம் இருக்கும் என்பதை டீசரும் உறுதிப்படுத்துகிறது என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இருந்தாலும் யூடியூப் தளத்தில் டீசருக்கு பாசிட்டிவ்வான கமெண்ட்டுகள்தான் நிறைய வந்துள்ளது. இதுவரையிலுமே சுமார் 25 ஆயிரம் கமெண்ட்டுகள் பதிவாகியுள்ளது. டீசரில் உள்ள வாசகங்கள், கடைசியில் இடம் பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் அனைத்துமே தமிழில் மட்டுமே இருப்பதற்கு ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேக்கிங்கில் அசத்தலாக இருப்பதால் 'விடாமுயற்சி' டீசர் மூலம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.