ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ், தெலுங்கில் மீடியம் பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் மீனாட்சி சவுத்ரி. 'கொலை' படத்தில் விஜய் ஆண்டனியுடனும், 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் ஆர்ஜே.பாலாஜியுடனும் நடித்தவர் அடுத்தகட்ட பாய்ச்சலாக 'கோட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். சமீபத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்தார். இதுதவிர 'மட்கா' படத்தில் வருண் தேஜ் ஜோடியாகவும், 'மெக்கானிக் ராக்கி' படத்தில் விஷ்வாக் சென் ஜோடியாகவும் நடித்தார்.
இந்த நிலையில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் படம் வெற்றி பெற்றாலும், படத்தில் அவர் துல்கர் சல்மான் மனைவியாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்தது அவருக்கு திருப்தியாக அமையவில்லை. 'இளம் வயதிலேயே இப்படி முதிர்ச்சியான கேரக்டரில் நடிப்பது விரைவிலேயே உன்னை குணசித்ர நடிகையாக மாற்றி விடும்' என்று நண்பர்களும், நலம் விரும்பிகளும் வற்புறுத்தியதை தொடர்ந்து இனி மனைவியாக, அம்மாவாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். படம் புக் பண்ண வருகிறவர்களிடம் இந்த நிபந்தனையை முன்பே விதித்து விடுகிறார்.
இதுகுறித்து மீனாட்சி சவுத்ரி கூறுகையில், “சில படங்களில் நான் ஹீரோவுக்கு மனைவியாக நடித்து இருந்தேன். 'லக்கி பாஸ்கர்' படத்தில் துல்கர் சல்மான் மனைவியாக நடித்த எனக்கு பாராட்டுகள் கிடைத்தது என்றாலும், சிலர் என்னை பயமுறுத்தி வருகின்றனர். அதாவது, 'நடிக்க வந்த ஆரம்ப நிலையிலேயே மனைவி போன்ற கேரக்டரில் நடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. அப்படி நடிப்பதற்கு இன்னும் சில காலம் இருக்கிறது. அதுவரை ரசிகர்களுக்குப் பிடித்த இளமையான கேரக்டர்களில் நடிக்க வேண்டும்' என்று சொல்கின்றனர். எனவே, இனிமேல் ஹீரோவுக்கு மனைவியாக நடிக்க வேண்டும் என்று யாராவது கேட்டால், அதில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.