பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! |
புகழ்பெற்ற ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான 'தி லயன் கிங்' வரிசையில் அடுத்து வருகிறது 'முபாஸா: தி லயன் கிங்'. முந்தைய பாகத்தில் குட்டி சிங்கத்தின் தந்தையாக இருந்த முபாஸாவை மெயின் கதாபாத்திரமாக்கி இந்த படம் உருவாகி உள்ளது. முந்தைய பாகத்தில் இடம்பெற்றிருந்த அத்தனை கேரக்டர்களும் இதில் இருக்கிறது. அந்த கேரக்டர்களுக்கு முன்பு யார்- குரல் கொடுத்தார்களோ அவர்கள் இந்த பாகத்திற்கும் குரல் கொடுக்கிறார்கள்.
முபாஸா கேரக்டருக்கு இந்த பாகத்தில் ஹாலிவுட் நடிகர் ஆரோன் பெரி குரல் கொடுத்துள்ளார். அதேபோன்று ஹிந்தி பதிப்பிற்கு ஷாருக்கான் குரல் கொடுத்துள்ளார். தமிழில் சூர்யா அல்லது விஜய்சேதுபதி குரல் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுதவிர தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் அந்தந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் குரல் கொடுக்க இருக்கிறார்கள். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பெர்தி ஜென்கின்ஸ் இயக்கி உள்ளார். வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளிவருகிறது.