வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
தற்போது தமிழில் தக்லைப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் சமீபகாலமாக படப்பிடிப்பு இல்லை என்றால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, சமீபத்தில் தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்கு சென்று இருப்பதாக அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் திரிஷா. அந்த பதிவில், 'நம்மை மனமுடைய செய்தவரிடத்தில் நெருங்கிய நட்புடன் பழகும் ஒருவருடன் நாம் பழகக் கூடாது' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் திரிஷா. யாரை இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. என்றாலும், ஏதோ சொந்த வாழ்க்கையில் தான் பாதிக்கப்பட்ட விஷயத்தைதான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.