லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விக்கி தயாரிக்கும் படம் 'கூரன்'. எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா, ரோபோ ஷங்கர் நடித்துள்ளனர். மாட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நிதின் வேமுபதி கூறியதாவது: பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி ஏறி போராடுகிறது. மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள் இவைகளுக்குமானதுதான் என்ற கருத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது என்றார்.