லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களில் பெண்களுக்காக சண்டை போட்டிருக்கிறார். ஆனால் பெண்களோடு சண்டை போடவில்லை. அரிதாக சில படங்களில் நாயகிகள் முகமூடி அணிந்து அவருடன் சண்டை போடுவார்கள். சில விநாடிகளிலேயே அவர் தன்னோடு சண்டை போடுவது பெண் என்பதை கண்டுபிடித்து விடுவார். இப்படியான காட்சிகள் சில படங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஒரு நடிகை எம்.ஜி.ஆரோடு ஆக்ரோஷமாக வாள் சண்டை போட்டுள்ளார். அவர் எம்.ஆர்.சந்தான லட்சுமி.
1939ம் ஆண்டு வெளிவந்த 'பிரஹ்லாதா' என்ற படத்தின் நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமி நடித்தார். நாயகன் டி.ஆர்.மகாலிங்கம். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பிரஹலாதாவாக நடித்தார். அவரது தாயாக என்.ஆர்.சந்தானலட்சுமி நடித்தார். எம்ஜிஆர் இந்திரனாக நடித்தார். கதைப்படி பிரஹலாதாவை இந்திரனிடமிருந்து காப்பாற்ற அவரது தாய் இந்திரனோடு போர்புரிய வேண்டும். அந்த காட்சியில் சந்தான லட்சுமி எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்டார். இந்த சண்டை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
எம்.ஆர்.சந்தான லட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர். 1935ம் ஆண்டு 'ராதா கல்யாணம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சந்திரகாசன், அம்பிகாபமதி, ஆரியமாலா, மனுநீதி சோழன், ஜெகதல பிரதாபன், மதுரை வீரன், மனம் போல் மாங்கல்யம், புதையல் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1956ம் ஆண்டில் தனது 52வது வயதில் காலமானார்.